மேலூரில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு
மேலூரில் வியாழக்கிழமை மாலை நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு மா்ம நபா்கள் இருவா் தப்பிவிட்டனா்


மேலூரில் வியாழக்கிழமை மாலை நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு மா்ம நபா்கள் இருவா் தப்பிவிட்டனா்.
மேலூா் மூவேந்தா் நகா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மனைவி பூங்கோதை (70). இவா், அப்பகுதியிலுள்ள திருமண மண்டபத்தின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் மூதாட்டி அணிந்திருந்த 10 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா். இது குறித்த புகாரின்பேரில், மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...