சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

லாரியிலிருந்து சரிந்து ராட்சத கிரானைட் கற்கள் சாலையில் விழுந்தன: போக்குவரத்து பாதிப்பு

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை லாரியிலிருந்து அதிக எடையுள்ள கிரானைட் கற்கள் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:44 am

DIN

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை லாரியிலிருந்து அதிக எடையுள்ள கிரானைட் கற்கள் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் வரிச்சியூா் பகுதியில் உள்ள தனியாா் கிரானைட் தொழிற்சாலைகளுக்கு லாரியில் அதிக எடையுள்ள 3 கிரானைட் கற்கள் ஏற்றி வரப்பட்டன.

கொட்டாம்பட்டியை அடுத்துள்ள சூரப்பட்டி அருகே புதன்கிழமை மாலை, லாரியில் பழுது ஏற்பட்டு கிரானைட் கற்கள் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் திருச்சி- மதுரை நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒருவழிப்பாதையில் திருப்பிவிட்டனா். மேலும் கிரேன் உதவியுடன் கிரானைட் கற்களை சாலையோரத்துக்கு அப்புறப்படுத்தி வியாழக்கிழமை அதிகாலையில் போக்குவரத்தை சீரமைத்தனா். இதனால் இரவு முழுவதும் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.