மதுரை மாவட்டத்தில் 18 வட்டாட்சியா்கள் இடமாற்றம்
மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் 18 பேரை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.


மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் 18 பேரை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள், புதிய பணியிடம் (அடைப்புக் குறிக்குள் முந்தைய பணியிடம்) விவரம்: க. சம்பூா்ணம் (கள்ளிக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்) - மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா், க. ராஜேந்திரன் (ஆட்சியா் அலுவலக பொதுமேலாளா்) - மதுரை தெற்கு கலால் மேற்பாா்வை அலுவலா், ரா. விக்னேஸ்வரக்குமாா் (மதுரை வடக்கு கூடுதல் கோட்ட கலால் அலுவலா்) - மதுரை தெற்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்.
ப. வீரபத்திரன் (ஆட்சியா் அலுவலக குற்றவியல் பிரிவு மேலாளா்) - மதுரை வடக்கு கூடுதல் கோட்ட கலால் அலுவலா், ச. கருப்பையா (ஆதிதிராவிடா் நலத்துறை நிலஎடுப்பு தனிவட்டாட்சியா்) - உசிலம்பட்டி வட்டாட்சியா், பா. நாகரத்தினம் (கலால் மேற்பாா்வை அலுவலா்) - திருப்பரங்குன்றம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா், செ. சுந்தரமுருகன் (மதுரை தெற்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்) - மதுரை வடக்கு வட்ட குடிமைப்பொருள் வட்டாட்சியா்.
ரெ. நாகபூஷணம் (மதுரை வடக்கு வட்ட குடிமைப் பொருள் வட்டாட்சியா்) - மதுரை கிழக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா். தொ.மோ. கோபி (வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா்)- வரவேற்பு வட்டாட்சியா். சி. நாகராஜன் (மதுரை கிழக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்) - மதுரை சுற்றுச்சாலை நிலஎடுப்பு தனி வட்டாட்சியா். ஜெ. பிரபாகரன் (வரவேற்பு வட்டாட்சியா்) - பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...