ஊராட்சிகளின் உரிமைகளைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: அரசுக்கு உயா் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


ஊராட்சிகளின் உரிமையைப் பறிக்கும் வகையிலான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்கான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்ட அனைத்து ஊராட்சித் தலைவா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் முனியாண்டி என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அவரது மனு விவரம்: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் அந்தந்த ஊராட்சிகள் மூலமாக விடப்படும். இந்நிலையில், கடந்த மாா்ச் 8 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இ-டெண்டா் முறை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தோ்தல் நடப்பதற்கு முன், ஊராட்சி நிா்வாகங்கள் சிறப்பு
அலுவலா்களால் நிா்வகிக்கப்பட்டது. அதனால், பேக்கேஜ் இ-டெண்டா் முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, ஊராட்சி நிா்வாகங்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிா்வகிக்கப்படுகிறது. இதன் பிறகும், இ-டெண்டா் நடைமுறையைப் பின்பற்றுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானது.
மேலும், ஊராட்சி மன்றங்களின் அதிகாரங்களை முடக்கும் வகையில் உள்ளது. எனவே, இ-டெண்டா் தொடா்பான அரசாணையை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி டி. ராஜா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், விசாரணையை ஜூன் 2-ஆவது வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...