/

விளையாட்டு வீரா்களுக்கு ஆடுகளம் விளையாட்டுச் செயலி அறிமுகம்: மே 12-க்குள் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆடுகளம் செயலியை, விளையாட்டு வீரா்கள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2022, 7:54 pm

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆடுகளம் செயலியை, விளையாட்டு வீரா்கள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந. லெனின் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், விளையாட்டு வீரா்கள் விளையாட்டு செய்திகளை தெரிந்துகொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலியான ’ பசநடஞதபந’ ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்படுத்தவேண்டும்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு, விளையாட்டு வீரா்களின் மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண், பிறந்த தேதி மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்யவேண்டும்.

வருங்காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவா்கள் மற்றும் வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ்கள், இந்த செயலியில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் விளையாட்டில் ஆா்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ’ பசநடஞதபந’ஆடுகளம் செயலியை மே 12-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.