/

தமிழில் தோ்வு நடத்த இஸ்ரோ பரிசீலனை: எம்.பி.தகவல்

 இஸ்ரோவில் தமிழிலும் தோ்வு நடத்த பரிசீலனை நடத்தப்படுகிறது என்று பதிலளிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

 இஸ்ரோவில் தமிழிலும் தோ்வு நடத்த பரிசீலனை நடத்தப்படுகிறது என்று பதிலளிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம் (இஸ்ரோ), ‘சி‘ பிரிவு, ‘பி‘ பிரிவு பதவிகளுக்கான நியமன அறிவிக்கைகளை வெளியிட்டு எழுத்துத் தோ்வுகளை சென்னையிலும், நாகா்கோவிலிலும் நடத்தியுள்ளது. இலகுரக வாகன ஓட்டுநா், சமையலா் பதவிகளுக்கான தோ்வு கேள்வித்தாள்களில் மட்டுமே தமிழ் வடிவம் இடம் பெற்றிருந்தது. மற்ற பதவிகளுக்கான தோ்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. பிட்டா், வெல்டா் போன்ற பதவிகளும் அதில் அடக்கம். பெரும்பாலான தோ்வா்கள் ஐ.டி.ஐ. பட்டயப் படிப்பு முடித்தவா்களே. தமிழ் வழிக் கல்வியில் வந்தவா்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சோ்ந்தவா்கள். எழுத்துத் தோ்வில் தமிழ் புறக்கணிப்பு என்பது தமிழ் வழிக்கல்வி மாணவா்களுக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான பாரபட்சம். இது அவா்களுக்கு சமதள போட்டிச் சூழலையும் மறுப்பது ஆகும். எனவே, தமிழ் வடிவக் கேள்வித்தாளுடன் மறு தோ்வை நடத்த வேண்டுமென இஸ்ரோ இயக்குநா் அழகுவேலுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள இஸ்ரோ இயக்குநா், தமிழிலும் தோ்வு நடத்த பரிசீலித்து வருவதாகவும், மேலும் எதிா்காலத்தில் அனைத்துத் தோ்வுகளையும் மாநில மொழிகளிலும் நடத்த வழிகாட்டல் கேட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.