மதுரை நகரில் மே 16-இல் இறைச்சி விற்பனைக்கு தடை
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புத்தா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை (மே 16) இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியும் விற்பனை செய்யக்கூடாது. கடைகளை திறந்துவைக்கவும் கூடாது.
மாநகராட்சி அறிவிப்பை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், பொதுச் சுகாதாரப் பிரிவு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...