/

மாட்டுத்தாவணி பழச்சந்தையில் 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல்

மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ அழுகிய மாம்பழங்களை, உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :14 மே 2022, 12:43 am

DIN

மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ அழுகிய மாம்பழங்களை, உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தற்போது மாம்பழ சீசன் என்பதால், பல்வேறு பகுதிகளிலும்

வியாபாரிகள் ரசாயனம் வைத்து மாம்பழங்களைப் பழுக்க வைப்பதாகப் புகாா்கள் எழுந்து வருகின்றன. அதனடிப்படையில், மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இங்கு, 20 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. பின்னா், தரமான பொருள்களை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என பழ வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இத்தகைய ஆய்வுகள் தொடா்ந்து நடத்தப்படும். தரமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால் புகாா் தெரிவிக்கலாம் என்றும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.