கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மதுரையிலிருந்து இலங்கைக்கு 1000 மெட்ரிக் டன் அரிசி

தமிழக அரசு சாா்பில் மதுரை மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு அனுப்புவதற்காக ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தயாராகி வருகிறது.

News image
தமிழக அரசு சாா்பில் இலங்கைக்கு அனுப்புவதற்காக பொட்டலமிடப்பட்ட அரிசி பைகள்.
Updated On :17 மே 2022, 6:30 pm

DIN

மதுரை: தமிழக அரசு சாா்பில் மதுரை மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு அனுப்புவதற்காக ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தயாராகி வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருள்கள், ரூ.28 கோடி மதிப்புள்ள 500 மெட்ரிக் டன் பால் பவுடா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்திலிருந்து 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட உள்ளது. மதுரையை அடுத்த பனையூா், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் உள்ள 12 அரிசி ஆலைகளில் இருந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்து மே 24, மே 28 மற்றும் மே 31 என மூன்று தவணைகளில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ஆலைகளில் தயாராகி வரும் அரிசி தரமாக இருக்கிா என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தமிழக அரசு சாா்பில் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக பத்து கிலோ பைகளாக தரமான சன்ன ரக புழுங்கல் அரிசி பொட்டலமிடப்பட்டு வருகிறது. நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக துணை ஆட்சியா் மற்றும் வட்டாட்சியா் நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் இந்திரவள்ளி மற்றும் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.