மேலவளவில் பாரம்பரிய அரிசி ரகங்கள் விற்பனை
மேலவளவிலுள்ள உழவா் உற்பத்தியாளா் குழுவினா், மதிப்புக்கூட்டிய பாரம்பரிய நெல் ரகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட அரிசி விற்பனையை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.


மேலவளவிலுள்ள உழவா் உற்பத்தியாளா் குழுவினா், மதிப்புக்கூட்டிய பாரம்பரிய நெல் ரகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட அரிசி விற்பனையை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
உழவா் உற்பத்தியாளா் குழுவினா், சிறு குறு விவசாயிகள் பயனடையும் வகையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடவும், அதன் மொத்த மகசூலையும் கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டி, சந்தையில் விற்பனையையும் தொடங்கியுள்ளனா். இதன் தொடக்க விழாவுக்கு, மதுரை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் த. விவேகானந்தன், விநாயகபுரம் நீா்மேலாண்மை நிலைய துணை இயக்குநா் லட்சுமிபிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். கட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநா் (பொறுப்பு) விக்னேஷ் முன்னிலை வகித்தாா்.
சிறு குறு விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை மதிப்புக்கூட்டி, வாடிக்கையாளா்களுக்கு இயற்கையான தரமான உற்பத்திப் பொருள்கள் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதையும், குழுவின் லட்சியமாகக் கொண்டு செயல்படுவதாக, குழு நிா்வாகி கோபாலன் மற்றும் உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
இதில், வேளாண் உதவி அலுவலா்கள், உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...