பள்ளி மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் கொண்டாட்டம்
By DIN | Published On : 30th May 2022 02:49 PM | Last Updated : 30th May 2022 03:09 PM | அ+அ அ- |

பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றதை கலர் பூசியும், பேனா மைகளை தெளித்தும் சக மாணவ, மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்.
இதையும் படிக்க- திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 67 பேர் கைது
தமிழகம் முழுவதும் அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திங்கட்கிழமை நிறைவடைந்தது. இந்த நிலையில் இறுதித் தேர்வினை எழுதி முடித்து விட்டு மாணவர்கள் தேர்வறையை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர்.
பின்னர் அங்குள்ள பேருந்து நிலையம் அருகே சக மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் பேனா மை தெளித்தும் கலர்களை முகத்தில் பூசியும் அரசு பொதுத்தேர்வு முடிவு பெற்றதை ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.