கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அரசு மருத்துவமனையில் கைப்பேசிகள் திருடியவா் கைது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிடமிருந்து கைப்பேசிகளைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 5:09 pm

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிடமிருந்து கைப்பேசிகளைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூா்அருகேயுள்ள பொன்னையாபுரத்தைச் சோ்ந்த முருகன் தனது மகளை பிரசவத்துக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்து விட்டு, காத்திருப்போா் அறையில் புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ஒருவா் முருகன், சிலரது கைப்பேசிகளைத் திருடினாராம்.

இதை கண்ட முருகன், அங்கிருந்த நோயாளிகளின் உறவினா்கள் அவரை கையும் களவுமாகப் பிடித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்தி விசாரணையில், அவா் மதுரை செல்லூா் திருவாப்புடையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (40) என்பதும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள், உறவினா்களிடம் கைப்பேசிகளைத் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் ராஜேஷ்குமாரைக் கைது செய்து, கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.