கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மனு

தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப

News image
Updated On :22 ஜூன் 2023, 5:10 pm

DIN

தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வீ. கணேசன், செயலா் எஸ். காா்த்திக், பொருளாளா் எம். காா்த்திகேயன் ஆகியோா் கூட்டாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாரிடம் (உயா்நிலை) அளித்துள்ள மனு விவரம்:

பணி ஓய்வு பெறும் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படாது என்கிற காரணத்தால் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி நிகழாண்டு பணி ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.

மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியா்களை 9-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த அனுமதிக்கக் கூடாது. 9, 10-ஆம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியா்கள் மட்டுமே பாடங்கள் நடத்த வேண்டும். கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆசிரியா்- மாணவா்களின் விகிதாசாரம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 25 மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆசிரியா் எனவும், 9, 10-ஆம் வகுப்பு வரை 30 மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆசிரியா் என்ற நிலையில் மாற்றம் செய்ய வேண்டும்.

தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான போதிய கழிப்பறை, வகுப்பறைக் கட்டடங்கள் கட்டித் தர வேண்டும். உயா்நிலைப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியா்களின் பணிநிரவலை உறுதி செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.