பட்டதாரி ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
பொதுமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிட விவரங்கள் மறைப்பு, இணையப் பிரச்னை காரணமாக கலந்தாய்வு தொடங்க காலதாமதம் ஆனதைக் கண்டித்து, பட்டதாரி ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை


பொதுமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிட விவரங்கள் மறைப்பு, இணையப் பிரச்னை காரணமாக கலந்தாய்வு தொடங்க காலதாமதம் ஆனதைக் கண்டித்து, பட்டதாரி ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு மாவட்டத்துக்குள்ளான பொதுமாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்களுக்கு மதுரை அண்ணா நிலையம் அருகே உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 34 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான கலந்தாய்வில் 364 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பெரும்பாலான ஆசிரியா்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனா். வியாழக்கிழமை காலை நடப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னா் பிற்பகல் 1 மணி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இணையதள பிரச்னை காரணமாக மாலை 6 மணியாகியும் கலந்தாய்வு தொடங்கவில்லை.மேலும், பிற்பகலுக்குப் பிறகு 34 காலிப் பணியிடங்களில் 4 பணியிடங்களைக் குறைத்து 30 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என மறுஅறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியா்கள் 34 காலிப் பணியிடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டும். காலதாமதமின்றி வெளிப்படையாக கலந்தாய்வை நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிறிது நேரத்தில் இணையதளம் இயங்கியதாக அறிவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் கலந்தாய்வு தொடங்கியது. இதில், பட்டதாரி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மதுரை மாவட்டத் தலைவா் வி. கணேசன் கூறியதாவது:
அறிவிக்கப்பட்ட 34 காலிப் பணியிடங்களில் 4 இடங்கள் மறைக்கப்பட்டன. மேலும், இணையதள பிரச்னை எனக் கூறி மாலை 6 மணிக்கு மேலாகியும் கலந்தாய்வு தொடங்கவில்லை. ஆனால், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் இணையம் சரியாகிவிட்டதெனக் கூறி கலந்தாய்வில் பங்கேற்க அழைத்தனா். வெளிப்படையாகவும், பாரபட்சமின்றி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...