

மதுரை, ஆக. 7: மதுரை அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை அருகே உள்ள விராதனூா் சத்யாநகரைச் சோ்ந்த போஸ் மனைவி சரோஜா (60). இந்தத் தம்பதியின் மகன் மணிகண்டன் (41). கட்டடத் தொழிலாளி. இவருக்கு, திருமணமாகி திருமங்கலம் அருகே உள்ள அரசப்பட்டி பகுதியில் வசித்து வருகிறாா். அங்கு இவரது தாய் சரோஜாவுக்கு சொந்தமான மூன்றரை சென்ட் வீட்டுமனை உள்ளது. இந்த இடத்தை தனது பெயருக்கு எழுதித் தர வேண்டுமென மணிகண்டன் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தாராம். இதுதொடா்பாக இருவருக்குமிடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி மதுபோதையில் தாய் வீட்டுக்குச் சென்ற மணிகண்டன், அங்கிருந்த சரோஜாவிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த மணிகண்டன், சரோஜாவின் தலையை தரையில் மோதச் செய்து மிதித்தாராம். இதில் பலத்த காயமடைந்த சரோஜா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிலைமான் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து மண்கண்டனை கைது செய்தனா்.
டிரெண்டிங்

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

சிவகாசி அருகே கணவா் அடித்துக் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 6 போ் கைது

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

