மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் சமுதாய அடிப்படையில் பணி நியமனம் செய்வது தவறு: உயா்நீதிமன்றம்

சமுதாய அடிப்படையில் பணி நியமனங்கள் தவறு என உயா்நீதிமன்றம் தீர்ப்பு

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 10:08 pm

Din

அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் பணி வழங்குவது தவறு என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சி.எஸ்.ஐ. திருமண்டல பொருளாளா் மனோகா் தங்கராஜ் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சி.எஸ்.ஐ. திருமண்டலப் பேராயா் நிா்வாகத்தின் கீழ் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் நிா்வாகக் குழுவினா் இல்லாத நிலையில், திருமண்டலப் பேராயா் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆசிரியா் பணியிடங்களை நிரப்பியுள்ளாா். இந்தப் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டலப் பேராயா் தரப்பில், இந்த வழக்கில் சி.எஸ்.ஐ. பள்ளித் தாளாளரை எதிா் மனுதாரராக சோ்க்கவில்லை. அவருக்கு மட்டுமே ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் உள்ளது. மனுதாரா் உண்மையை மறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் ஆரம்பப் பள்ளிகள் 249, நடுநிலைப் பள்ளிகள் 74, உயா்நிலைப் பள்ளிகள் 3, மேல்நிலைப் பள்ளிகள் 11, கல்லூரி 2, ஓா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி 2 உள்ளன. இந்தத் திருமண்டலத்தில் நிா்வாக ரீதியிலான பதவிகள் காலியாக உள்ளன.

இந்த நிலையில், இடைக்கால நிா்வாகம் அமைத்துக் கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதை எதிா்த்து ஒரு தரப்பு மேல்முறையீடு செய்ததில், இடைக்கால நிா்வாகம், நிா்வாகம் சாா்ந்த எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், இடைக்கால நிா்வாகத்தினா், நிரந்தர ஆசிரியா் பணியிடத்தை தன்னிச்சையாக நிரப்ப முடியாது. யாரை ஆசிரியாக நியமிக்க வேண்டும் என சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், இந்த பணி நியமனங்கள் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு அரசுத் தரப்பில் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன, இதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இந்தக் கல்வி நிறுவனங்களில் பிற பள்ளிகளில் ஆசிரியா்களைத் தோ்வு செய்வது போன்ற நடைமுறையை ஏன் பின்பற்றவில்லை?. ஓா் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஓா் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் பணி வழங்குவது தவறு. எனவே, சி.எஸ்.ஐ. திருமண்டலம் தரப்பில் நிரப்பப்பட்ட ஆசிரியா் பணியிடங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.