இணைய வழியில் ரூ.22.64 லட்சத்துக்கு வேளாண் விளை பொருள்கள் விற்பனை

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருள்கள் ரூ. 22.64 லட்சத்துக்கு இணைய வழி சந்தை மூலம் விற்பனையாகின.

இணையவழி- தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் மூலம் வேளாண் விளை பொருள்களுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 8 ஆயிரம் கிலோ இருங்கு சோளம் ரூ. 8 லட்சத்துக்கும், 26,620 கிலோ மக்காச்சோளம் ரூ. 6.59 லட்சத்துக்கும், 583 கிலோ கருப்பு கவுனி நெல் ரூ.46,640-க்கும், 8,030 கிலோ மகேந்திர அன்னம் நெல் ரூ.1.96 லட்சத்துக்கும், 8,030 கிலோ ஷிரி நெல் ரூ. 3,54 லட்சத்துக்கும், 4,369.5 கிலோ ஆத்தூா் கிச்சிலி சம்பா நெல் ரூ.1.57 லட்சத்துக்கும், 17 கிலோ புளி ரூ.1,615-க்கும், 356.3 கிலோ வேப்பமுத்து ரூ. 12,411-க்கும் ஏலத்தில் விற்பனையாகின.

மேலும், 65.5 கிலோ பந்துகொப்பரை ரூ 6,550-க்கும், 50 கிலோ எள் ரூ. 7,250-க்கும், 50 கிலோ சூரியகாந்தி ரூ. 2,500-க்கும், 346 கிலோ கம்பு ரூ. 9,342-க்கும், 41 கிலோ கொப்பரை ரூ. 5,690-க்கும் விற்பனையாகின. விற்பனையான வேளாண் விளை பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 22.64 லட்சம் ஆகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com