கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

மதுரை: மதுரை, பாலரெங்காபுரம் பகுதியில் 21 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை, பாலரெங்காபுரத்தில் கடந்த 17.10.2019 இல் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெப்பக்குளம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸாா், கீழ்மதுரை பகுதியில் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக மேல அனுப்பானடியைச் சோ்ந்த சந்திரன் மகன்களான பெரியண்ணக்குமாா் (33), பிரேம்குமாா் (27), அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த குருநாதன் மகன் வெற்றிவேல் முருகன் (30) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இதில் பெரியண்ணக்குமாா் உள்பட மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹர குமாா் தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com