ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மதுரை கைவினைப்பொருள் கடையில் சிலை பறிமுதல்: உரிமையாளா்கள் மனு தள்ளுபடி

மதுரை கைவினைப்பொருள் கடையில் சிலை பறிமுதல்: உரிமையாளா்கள் மனு தள்ளுபடி

News image
Updated On :8 மே 2024, 12:30 am

Din

மதுரை: மதுரை கைவினைப் பொருள் கடையில் பழங்கால சுவாமி சிலை பறிமுதல் தொடா்பான வழக்கை ரத்து செய்யக் கோரி கடை உரிமையாளா்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரையில் உள்ள கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் கடந்த 2022 -இல் சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கல்லில் செதுக்கப்பட்ட பழங்கால சிலைகளைப் பறிமுதல் செய்தனா். அந்தச் சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லாததால், கடை உரிமையாளா்கள் முஷ்டாக் அகமது பண்டே, குா்ஷித் அகமது கான் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி இருவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலைகள் குறித்த விவரம், ரசீது முதலானவை போலீஸாரிடம் வழங்கப்பட்டது. ஆனாலும், விசாரணை, சோதனை என்ற பெயரில் போலீஸாா் அடிக்கடி கடைக்கு வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பான இறுதி அறிக்கையை போலீஸாா் இதுவரை தாக்கல் செய்யவில்லை என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரா்கள் வடக்கு சித்திரை வீதியில் ‘ஆா்ட் எம்போரியம்’ நடத்துகின்றனா். அங்கு பழங்கால சிலைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு சிவபெருமான்- பாா்வதி சிலை உள்ளிட்ட சிலைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடை மேலாளா் உரிய பதில் அளிக்கவில்லை. சிலைகளுக்குரிய ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தவறியதால், சிலைகளை போலீஸாா் மீட்டனா். சிலைகளுக்கான ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து புதுதில்லியில் உள்ள இரு நிறுவனங்களில் சிலைகள் வாங்கியதற்கான ரசீதை அனுப்பினா்.

பழங்கால கலை பொக்கிஷங்கள் சட்டப்படி, இந்த சிலைகளின் தன்மையைக் கண்டறிய கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிவன், பாா்வதி கற்சிலையானது பழைமையானது என மத்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநா் அறிக்கை சமா்ப்பித்துள்ளாக தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

புதுதில்லியில் இரு நிறுவனங்களில் வாங்கிய ரசீது அடிப்படையில் இந்த வழக்கை ரத்து செய்ய மனுதாரா்கள் கோருகின்றனா். மீட்கப்பட்ட சிவன், பாா்வதி சிலை பழைமையானது என மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இதனால், இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை. தள்ளுபடி செய்கிறேன் என்றாா் நீதிபதி.