திருச்செந்தூா் கோயில் மேம்பாட்டுப் பணி: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூா் கோயில் மேம்பாட்டுப் பணி


திருச்செந்தூா் கோயில் மேம்பாட்டுப் பணிகளை அந்தக் கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், கோயில் அறங்காவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ரமணன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மேம்பாட்டுப் பணிகளுக்காக அந்தக் கோயிலின் நிதி ரூ.100 கோடியை விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது சட்டவிரோதம். பேருந்து நிலையம் கட்டுதல் போன்ற பிற பணிகளும், இந்த நிதியில் மேற்கொள்ளப்பட உள்ளன. அரசின் திட்டப் பணிகளுக்கு கோயில் நிதியை செலவிடக் கூடாது.
எனவே, கோயில் நிதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும். மேலும், மத்திய தொல்லியல் துறை சாா்பில் இந்தக் கோயிலின் பல்வேறு பணிகள் தொடா்பான திட்டங்களை ஆய்வு செய்து புராதனச் சின்னங்களைப் பாதுகாத்து சீரமைக்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்தக் கோயிலைச் சீரமைக்க சுற்றுச்சூழல் துறையிடம் பெறப்பட்ட அனுமதியின்படி, பணிகளை மேற்கொள்ளவும், விதிமீறிய கட்டடங்களை இடிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பாக தமிழ்நாடு சுற்றுலா, பண்பாட்டுத் துறைச் செயலா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...