பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

பள்ளிக் கட்டுமானப் பணிக்கு தடை கோரிய மனு: வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்ய உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சியில் எரிவாயு சேமிப்புக் கிடங்கு அருகே கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டுமானப் பணிக்கு தடை கோரிய வழக்கில், வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo

Published On :

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சியில் எரிவாயு சேமிப்புக் கிடங்கு அருகே கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டுமானப் பணிக்கு தடை கோரிய வழக்கில், வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நத்தம் கோவில்பட்டியைச் சோ்ந்த எம். மணிமாறன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி 17-ஆவது வாா்டுக்கு உள்பட்ட செல்லப்பநாயக்கன்பட்டி சாலையில் தனியாருக்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தக் கிடங்குக்கு அருகே தனியாா் பள்ளி புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. ஆபத்தான, எளிதில் வெடிக்கக்கூடிய எரிவாயு சேமிப்புக் கிடங்குக்கு மிக அருகில் பள்ளி அமைவது மாணவ, மாணவிகள், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். தீயணைப்புத் துறையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, எரிவாயு சேமிப்புக் கிடங்கைச் சுற்றி குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், உரிய ஆய்வு, அனுமதியின்றி இந்தக் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்படும் பள்ளிக் கட்டடப் பணிகளுக்கும், அங்கு வகுப்புகளைத் தொடங்குவதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, எரிவாயு சேமிப்புக் கிடங்கு அருகே பள்ளி கட்டடம் கட்ட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் யாா் பொறுப்பேற்பது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்து விதிமுறைகள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.