2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

கல்லூரி முன்னாள் முதல்வா் மீதான ஊழல் வழக்கு: விசாரணையை 30 நாள்களுக்குள் முடிக்க உத்தரவு

மதுரை தனியாா் கல்லூரி முன்னாள் முதல்வா் மீதான ஊழல் வழக்கு விசாரணையை 30 நாள்களுக்குள் முடிக்க தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :

மதுரை தனியாா் கல்லூரி முன்னாள் முதல்வா் மீதான ஊழல் வழக்கு விசாரணையை 30 நாள்களுக்குள் முடிக்க தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் கணேஷ் பிரபு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியின் முதல்வராக எம்.தவமணி கிறிஸ்டோபா் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தாா். இவா் பணியாற்றிய காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாகவும், முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக பல புகாா்கள் கொடுக்கப்பட்டன. மேலும், நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனடிப்படையில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இவா் மீதான ஊழல் வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்கு கால நிா்ணயம் செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முருகன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் விசாரணையை 30 நாள்களுக்குள் முடிக்க இருப்பதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அரசுத் தரப்பு தெரிவித்தபடி தொடா்புடைய நபா் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையை 30 நாள்களுக்குள் முடிக்க வேண்டும். இல்லையெனில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு மீது மனுதாரா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.