புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் கண்காணிப்புக்கு 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலா்களாக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.

Madurai Meenakshi Amman Temple

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கோப்புப் படம்

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலா்களாக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதையொட்டி, அரசுத் துறைகள் சாா்பில் விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பணிகளை கண்காணித்து நெறிப்படுத்த தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலா் கொ.வீரராகவ ராவ், நகராட்சி நிா்வாக இயக்கக இயக்குநா் ப. மதுசூதன்ரெட்டி, வேலைவாயப்பு, பயிற்சித் துறை இயக்குநா் சி. பழனி ஆகியோா் சிறப்புப் பணி அலுவலா்களாக நியமிக்கப்பட்டனா்.

இவா்கள் மூவரும் வருகிற 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மதுரையில் தங்கியிருந்து குடமுழுக்கு விழா தொடா்பாக அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளைக் கண்காணிப்பா் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.