
கீழராமநதி ஊராட்சியில் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை திட்டம்
கமுதி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கபட்ட குப்பை சேகரிக்கும் கிடங்குகள் பராமரிப்பின்றி வீணடிக்கபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கமுதி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கபட்ட குப்பை சேகரிக்கும் கிடங்குகள் பராமரிப்பின்றி வீணடிக்கபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கீழராமநதி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் 2016-17 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பை சேகரிக்கும் 3 கிடங்குகள், அதே நிதியாண்டில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பை தரம் பிரிக்கும் கூடம், அதன் அருகே 2017--18 ஆண்டில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சேகரிக்கபடும் குப்பைகளை தரம் பிரித்து மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டது.
தற்போது வரை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிப்பு, மண்புழு உரம் தயாரித்தல் பணிகள் மேற்கொள்ளப்படாமல் பெயரளவில் திட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளபட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் இல்லாததால், அரசு நிதி வீணடிக்கப்பட்டு, குப்பைக்கிடங்குகள் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் ஊராட்சியில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் அரசு நிதி வீணடிக்கபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



