/

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூலை 2020, 6:44 am

DIN

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவ தலைவர்கள் ஜேசுராஜா, சகாயம், எமரிட், ஆல்வின், உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் மீன்பிடித் தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் டீசலுக்கு சாலை வரியை ரத்து செய்து முழுமையாக டீசல் வழங்க வேண்டும். பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்கும் பொழுது மீன்வளத்துறை விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு செய்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. 

இதனை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மற்றும் 24 ம் தேதி பேருந்து நிலையம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலைநிறுத்தம் தொடங்கிய நிலையில் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கொள்ளுவது என தீர்மானம் திங்கட்கிழமை  நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.