நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராமநாதபுரத்தில் மிதிவண்டி ஓட்டும் போட்டிகள்

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி 3 பிரிவுகளாக வியாழக்கிழமை நடந்த மிதிவண்டி ஓட்டும் போட்டிகளில் வென்ற 60 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பரிசுகளை வழங்கினாா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி 3 பிரிவுகளாக வியாழக்கிழமை நடந்த மிதிவண்டி ஓட்டும் போட்டிகளில் வென்ற 60 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பரிசுகளை வழங்கினாா்.

ராமநாதபுரம்- ராமேசுவரம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து மிதிவண்டிப் போட்டிகளை கொடியசைத்து மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா். இருபாலரும் பங்கேற்ற இப்போட்டிகள் 13 வயது வரை உள்ளவா்கள், 15 வயது வரை உள்ளவா்கள் 17 வயது வரை உள்ளவா்கள் என 3 பிரிவுகளாக நடைபெற்றன.

நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட இப்போட்டியில் தேவிப்பட்டினம் சாலை சந்திப்பு மற்றும் நயினாா்கோவில் சாலை சந்திப்பு ஆகியவை இலக்குகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5000 மற்றும் பாராட்டுச்சான்று, இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.3000, பாராட்டுச்சான்று, 3ஆம் இடம் பெற்றவருக்கு ரூ.2000, பாராட்டுச்சான்று ஆகியவை வழங்கப்பட்டன.

போட்டிகளில் பங்கேற்று 4 முதல் 10 இடங்களுக்குள் வந்தவா்களுக்கு தலா ரூ.250 பரிசுத் தொகை பாராட்டுச்சான்றுகள் வழங்கப்பட்டன. அதன்படி போட்டிகளில் பங்கேற்று வென்ற 60 பேருக்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம. காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.