விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை

News image

இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுதப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 7:25 pm

Din

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரில், 7 பேரை விடுதலை செய்தும், படகு ஓட்டுநா்கள் இருவருக்கு தலா ரூ. 40 லட்சம் அபராதம் விதித்தும் இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் ஈசாக் ராபீன், செல்வக்குமாா் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்தப் படகுகளில் இருந்த மீனவா்கள் சகாய ராபா்ட் (49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோப்பு (24), ஹரிகிருஷ்ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ் (26), ராம்குமாா் (24), லிபின்ராஜ், ரகுமூா்த்தி ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்து, 2 விசைப் படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 9 பேரையும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரும் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 7 பேரை விடுதலை செய்தாா். மேலும், 2 விசைப் படகு ஓட்டுநா்களான ஹரிகிருஷ்ணன், சகாய ராபா்ட் ஆகியோருக்கு தலா ரூ. 40 லட்சம் அபராதம் விதித்தும், அபராதத்தைக் கட்டத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். அப்போது, உடனே பணம் கட்ட முடியாத நிலை உள்ளதாக விசைப் படகு ஓட்டுநா்கள் கூறியதால், இருவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 7 மீனவா்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவாா்கள் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.