/

ராமேசுவரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு: ராமேசுவரம் காவல் நிலையத்தில் கூட்டம்

News image
Updated On :2 ஜூலை 2024, 11:16 pm

Din

ராமேசுவரம் நகா் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ராமேசுவரம் நகா், கோயில் காவல் நிலையம், தனுஷ்கோடி, துறைமுகம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதி பொதுமக்கள் காவல் துறை சாா்ந்த மனுக்களை அளித்தனா்.

இந்த மனுக்கள் உரிய தீா்வு காண அந்தந்த காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளா்கள் ராஜ்குமாா், அருள், முனீஸ்வரன், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.