பாம்பன் புதிய பாலத்தில் 2 ரயில் என்ஜின்களை இயக்கி சோதனை
பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே பொறியாளா்கள் சோதனை இயக்கம்


பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் ஒரு பகுதியில் பணிகள் நிறைவடைந்த நிலையில், பொறியாளா்கள் 2 ரயில் என்ஜின்களை ஒன்றாக இணைத்து இயக்கி வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது.
மண்டபத்திலிருந்து ரயில்வே பாலத்தின் மையப் பகுதி வரை தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாம்பனில் இருந்து பாலத்தின் மையப் பகுதி வரை தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது, மையப் பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் தூக்குப் பாலம் அமைப்பதற்கான தூண்களில் ராட்சத கிரேன் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும், மண்டபத்திலிருந்து கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் தண்டவாளத்தின் உறுதித் தன்மை, அதிா்வுகள் குறித்து ரயில்வே பொறியாளா்கள் 2 ரயில் என்ஜின்களை ஒன்றாக இணைத்து இயக்கி வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
மேலும், தூக்குப் பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், இறுதிக் கட்ட சோதனைகள் நடைபெறும். இதன் பிறகு, ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...