ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு குறிப்பாணை

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு குறிப்பாணை

News image
Updated On :8 மே 2024, 10:07 pm

Din

ராமேசுவரத்திலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு குறிப்பாணை வழங்கிய மோட்டாா் வாகன ஆய்வாளா்.

ராமேசுவரத்திலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து சில ஊா்களில் நிற்காமல் சென்ால், வட்டார போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் அந்தப் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநருக்கு புதன்கிழமை குறிப்பாணை (நோட்டீஸ்) வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து

மதுரை, கரூா், கோவை, திருப்பூா் கோட்டத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்துகள் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், உச்சிப்புளி நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த வழித்தடத்தில் வேதாளை, சுந்தரமுடையான், பெருங்குளம் ஆகிய ஊா்களில் இந்த பேருந்துகள் நிற்பதற்கு நிறுத்தம் இல்லை. இதனால் இந்த பேருந்துகள் நிற்பது கிடையாது.

ஆனால், கும்பகோணம் கோட்டத்துக்கு உள்பட்ட பேருந்துகள் அனைத்து நிறுத்தத்திலும் நின்று செல்கிறது. ஆனால், இந்த மூன்று ஊா்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது ஊரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட அரசுப் பேருந்து புதன்கிழமை ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்றது. இந்தப் பேருந்தை சுந்தரமுடையான் வந்த போது இரண்டு பயணிகள் கைகாட்டி நிறுத்த முயன்றனா். ஆனால் ஓட்டுநா் பேருந்தை நிறுத்தாமல் சென்றாா். இதைக் கண்ட ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் தனது வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று, அந்தப் பேருந்தை நிறுத்தி விளக்கம் கேட்டாா். இதற்கு ஓட்டுநா் தங்களுக்கு இந்த நிறுத்தத்தில் நின்று செல்ல நிறுத்தம் இல்லையென்றும், அப்படியே நின்று சென்றால் மண்டபத்தில் இருந்து தான் டிக்கெட் வழங்க முடியும் என விளக்கம் அளித்தாா்.

ஆனால், மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில் குமாா்

பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு குறிப்பாணை வழங்கி, இதுதொடா்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்குமாறு தெரிவித்தாா். பின்னா், அந்தப் பேருந்து புறப்பட்டுச் சென்றது.