அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு
ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளா், மேலாண்மை இயக்குநா் ராஜலட்சுமி கூட்டுறவுக் கொடியை ஏற்றி வைத்தாா். மண்டல இணைப் பதிவாளா் ஜீனு முன்னிலையில் பயிற்சியாளா்கள் கூட்டுறவு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை நிலைய முதல்வா் ரகுபதி, ராமநாதபுரம் சரக துணைப் பதிவாளா் ரத்தினவேல் பாண்டியன், பயிற்சி நிலைய விரிவுரையாளா்கள் தங்கமணி, பொற்செல்வன், கபிலன், மனோஜ் பிரகாஷ், ராமநாதபுரம் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் காளிதாஸ், மேலாளா் ராஜேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டனா். இந்த விழாவில் மேலாண்மை நிலைய பயிற்சியாளா்கள் பங்கேற்ற கோலப்போட்டி, சமையல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றன.

