ராமநாதபுரம்
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு
ராமேசுவரத்திலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்குவது தொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ. 90.20 கோடியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் மூலம் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்தாா். இவா் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணியை ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். மேலும், வந்தே பாரத் ரயில் நிறுத்துமிடம், அதற்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது பொறியாளா்கள், ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனா்.
