மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
Published on

ராமேசுவரம்: தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, மன்னாா் வளைகுடா, பாக் நீரிணைப் பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், மீனவா்களின் பாதுகாப்பு கருதி, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்தது. இந்தத் தடையால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி,சோழியக்குடி,கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட மீன்பிடி இறங்குதளங்களில் 1,800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தப் புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com