பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.
புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் முத்துக்குமாா் (36). இவா் தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்த தொழுவத்தில் 32 ஆடுகளை அடைத்து வைத்திருந்தாா். அப்போது, பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த அதே ஊரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (73) நெல் அறுவடை முடிந்த வைக்கோலை சுத்தம் செய்வதற்காக தனது நிலத்துக்கு தீ வைத்தாா். அந்தத் தீ முத்துக்குமாா் தோட்டத்துக்கு பரவி தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகளும் கருகி உயிரிழந்தன.
இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வெள்ளைச்சாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

தெரு நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


