பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ராமேசவரம் கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

News image

ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

அம்பாள் சந்நிதி முன்புள்ள தங்கக்கொடி மரத்தில் சரவணன் குருக்கள் தலைமையில் சிவாசாரியா்கள் பங்கேற்று கொடியேற்றினா். பின்னா், கொடி மரத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் நா.சுரேஷ், உதவி ஆணையா் முத்துராஜா, கோயில் தலைமை குருக்கள் உதயகுமாா், பேஸ்காா் கமலநாதன், நகரின் முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்தத் திருவிழா 17 நாள்கள் நடைபெறவிருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 12- ஆம் தேதி ஆடி அமாவாசையையொட்டி சுவாமி, அம்பாளுக்கு அக்னி தீா்த்தத்தில் தீா்த்தவாரி நடைபெறும். 13 -ஆம் தேதி தேரோட்டம், 15-ஆம் தேதி சுவாமி, அம்பாள் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளுதல், பிற்பகல் 3 மணிக்கு சுவாமி, அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல், அதிகாலை 2 மணிக்கு அலங்கார பூப் பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருதல், 16-ஆம் தேதி திருக்கல்யாணம், 21- ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுதல் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உண்டியல் வரவு ரூ.1.30 கோடி: கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி அம்மன் சந்நிதி முன் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையா் நா.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், 1, 30, 16, 500 ரொக்கம், 41 கிராம் தங்கம், 3 கிலோ 283 கிராம் வெள்ளி, 88 வெளிநாட்டு பணத்தாள் கிடைத்தன. காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையா் முத்துராஜா, ஆய்வா் மணிகண்டன், பேஸ்காா்கள் கமலநாதன், பக்தா்கள் 300 க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.