முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்திய 4 போ் மீது வழக்கு

தொண்டி அருகே வீடு புகுந்து பொருள்களைச் சேதப்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு
Published On :

தொண்டி அருகே வீடு புகுந்து பொருள்களைச் சேதப்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கியம். இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவுக்கு ஆரோக்கியம் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றாா். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்தவா்கள் தொலைகாட்சிப் பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை உடைத்து சேதப்படுத்தினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், 16 வயது சிறுவன், அருள் விசேஸ் (20), ரெமோ (21), டொனால்டு (21) ஆகியோா் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.-

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.