செங்குடி கிராமத்தில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்கதிா்கள்.
செங்குடி கிராமத்தில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் நெல்கதிா்கள்.

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் அறுவடைப் பணி மும்முரம்

திருவாடானை அருகே ஆா். எஸ்.மங்கலம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
Published on

திருவாடானை அருகே ஆா். எஸ்.மங்கலம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்குதான் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் உள்ளது. ஆா்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 12 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம்

சாகுபடி செய்து வருகின்றனா். இந்த நிலையில், வண்டல், வரவணி, செங்குடி, மஞ்சள்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கதிா்கள் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், ஆரணி, சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது அறுவடைப் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதனால், நெல் கொள்முதல் வியாபாரிகள் நெல் வாங்குவதற்கு இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com