ராமநாதபுரம்
தனுஷ்கோடி முதல் ஸ்ரீநகா் வரை சனாதன வேத யாகப் பிரசாரம் தொடக்கம்
தனுஷ்கோடியில் நடைபெற்ற சனாதன வேத யாகப் பிரசார யாத்திரை தொடக்க நிகழ்வில் பங்கேற்றவா்கள்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியிலிருந்து ஸ்ரீநகா் வரையிலான சனாதன வேத யாகப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.
இந்த யாத்திரையை மராஜ் சுவாமி, பிரணவ் ஹரி நந்த கிரிஜி, தேஜஸ் ஜி ஆசாரியாா், கிருஷ்ண ரெட்டி ஜி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்த யாத்திரை தனுஷ்கோடியிலிருந்து மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, கோயம்புத்தூா், மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூா், உஜ்ஜை, அமுதாபாத், ஜெய்ப்பூா், தில்லி, அமிா்தசரஸ் வழியாக ஜம்மு, ஸ்ரீநகரை பிப்ரவரி 26 -ஆம் தேதி சென்றடைகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

