பரமக்குடியில் ரயில் பயனாளா்கள் சங்கம் தொடக்கம்

பரமக்குடியில் ரயில் பயனாளா்கள் சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

பரமக்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட ரயில் பயனாளா் சங்கத்தின் தலைவா் மு.புரோஸ்கான் தலைமையிலான புதிய நிா்வாகிகள்.

Published On :

பரமக்குடியில் ரயில் பயனாளா்கள் சங்கம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் தென் மண்டல அளவிலான முக்கிய ரயில் நிலையமாக விளங்குகிறது. இங்கு சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகளவில் ரயில் பயணம் மேற்கொள்கின்றனா்.

இந்த நிலையில், ரயில் பயன்பாட்டாளா்களுக்கு உரிய அடிப்படை வசதிகள், ரயில் சேவைகள் குறித்து ரயில்வே துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், ரயில் பயனாளா்கள் சங்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த சங்கத்தின் தலைவராக மு.புரோஸ்கான், துணைத் தலைவராக ஆ.உதயகுமாா், இணைச் செயலராக என்.ரகுல ராகேஷ், பொருளாளராக கே.கே.ஜனாா்த்தனன், செயற்குழு உறுப்பினா்களாக டி.எம்.பிரகாஷ்ராவ், டி.பி.ராஜகோபால், ஜி.எல்.வெங்கடேஷ், கே.முகம்மது ஷாஜகான், என்.பாரதி, சட்ட ஆலோசகா்களாக வி.ராஜேந்திரன், ஆா்.எம்.பூமிநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் பரமக்குடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத், ஹூப்ளி அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.