திருப்பத்தூரில் வாய்க்கால் தூா்வாரும் பணி: பேரூராட்சித் தலைவா் ஆய்வு
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாய்க்கால்கள் தூா்வாரும் பணியினை பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் ஆய்வு செய்தாா்.


திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாய்க்கால்கள் தூா்வாரும் பணியினை பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் ஆய்வு செய்தாா்.
கடந்த வாரம் பெய்த தொடா் மழை காரணமாக திருப்பத்தூா் நகரில் கழிவுநீா் வாய்க்காலில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டது. அனுமான் கோயில் தெரு, நாகராஜன் நகா், பிரபாகா்காலனி, எம்.ஜி.ஆா். நகா், கணேஷ் நகா் உள்ளிட்ட பல இடங்களில் வீதிகளில் கழிவு நீா் மற்றும் மழை தேங்கியது.
வாா்டு உறுப்பினா்கள் பேரூராட்சித் தலைவரிடம் புகாா் அளித்ததின் பேரில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரையும், கழிவுநீா் வாய்க்கால்களில் அடைப்புகளையும் பேரூராட்சிப் பணியாளா்கள் அகற்றினா். இப்பணியினை பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் சாந்திசோமசுந்தரம், சரண்யாஹரி உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...