இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தூதையில் வருமுன் காப்போம் திட்ட முகாம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் தூதையில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

News image
~
Updated On :19 ஜூலை 2024, 7:55 pm

Din

மானாமதுரை, ஜூலை 19 : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் தூதையில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் பா. சின்னையா தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்றத் தலைவா் த.சேங்கைமாறன் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் திரளான மக்கள் பங்கேற்று நோய் தடுப்புப் பரிசோதனை செய்து கொண்டனா். இவா்களுக்கு மருத்துவ குழுவினா் பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினா்.

இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் கொண்ட பெட்டகங்களையும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளுக்கு மருந்து பெட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினாா். முகாமில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பூமாதேவி சின்னையா, ஈஸ்வரன், திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் டி.ஆா். சேகா், நகரச் செயலா் நாகூா்கனி மற்றும் மருத்துவத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image