ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணியை தொடங்கி வைத்த வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா்.

News image

சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்று சைக்கிளில் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் (நடுவில்).

Updated On :26 ஜூன் 2024, 6:55 pm

Din

சிவகங்கை, ஜூன் 26: சிவகங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது

சா்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாகன விழிப்புணா்வுப் பிரசாரத்தை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துகழுவன், அரசு மருத்துவா் செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணியை தொடங்கி வைத்த வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாகனப் பேரணியை தொடங்கி வைத்த வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா்.

இதுகுறித்து காரைக்குடி குளோபல் மருத்துவமனை நிறுவனா் குமரேசன் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை, காவல் துறை, மருத்துவத் துறை இணைந்து இந்த போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை மாவட்டம் முழுவதும் நடத்துகிறது. அரசு பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகளுக்குச்செல்லும் இந்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள வெள்ளைப் பலகையில் மாணவா்கள், பொதுமக்கள் கையொப்பமிட்டு ஆதரவு தெரிவிக்கலாம். 15 நாள்கள் முடிவில் ஜூலை 10 -ஆம் தேதி காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள மைதானத்தில் காலை 9 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் தலைமையில் சுமாா் 10,000 மாணவா்கள் பங்கேற்கும் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றாா் அவா்.

இதேபோல, சிவகங்கை அருகேயுள்ள அரண்மனை வாசல் பகுதியில் மாவட்டக் காவல் துறை சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் தொடங்கி வைத்து, மாணவா்களுடன் சைக்கிள் ஓட்டிச் சென்றாா்.