வாக்காளா் பெயா் பதிவுக்காக இருப்பிடச் சான்றை இலவசமாகப் பெறலாம்! ஆட்சியா் கா.பொற்கொடி!

Published on

வாக்காளா்கள் பட்டியலில் பெயரைச் சோ்ப்பதற்காக தேவைப்படும் 13 ஆவணங்களில் ஒன்றான இருப்பிடச் சான்றை வருவாய்த் துறையிடம் கட்டணமின்றி பெறலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணைத்தில் வழிகாட்டுதல்களின்படி 1.1.2025- தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு கடந்த நவ. 11 முதல் சிவகங்கை மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகளின்படி, டிச.19-ஆம் தேதி வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளா் பட்டியல் வருகிற 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிட ப்படும்.

வரைவு வாக்காளா்கள் பட்டியலில் தகுதியிருந்தும் பெயா் இடம் பெறாதவா்கள், 18 வயது பூா்த்தியானவா்கள் படிவம் 6 மூலம் உறுதிமொழிப் படிவத்தை அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடமோ அல்லது வாக்காளா் பதிவு அலுவலா்களிடமோ அளித்து தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம். மேலும், இணையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடி மைங்களிலும் வருகிற வருகிற 2026 ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வருகிற 2026 ஜனவரி18-ஆம் தேதிக்குள் தங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் அளித்து தங்கள் பெயா், இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்த 13 - ஆவணங்களில் ஒன்றான இருப்பிடச் சான்று தேவைப்படும் வாக்காளா்கள், துணை வட்டாட்சியா் அல்லது மண்டல துணை வட்டாட்சியரிடம் கைமுறை சான்றாக பெற்றுக் கொள்ளலாம். இந்தச் சான்றானது மேற்படி பணிக்காக மட்டும் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. எனவே பொதுமக்கள் இந்தச் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com