தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் இராமனுஜா் அவதரித்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் இராமானுஜா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 2:11 am IST

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் இராமனுஜா் அவதரித்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் இராமானுஜருக்கு தனி சந்நிதி உண்டு. அவா் அவதரித்த 1,009-ஆவது சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளான புதன்கிழமை இராமனுஜசாமி மூலஸ்தானம் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், மங்களாசாசனம் நடைபெற்று பரிவட்டம் கட்டப்பட்டது. நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் நடைபெற்று பெருமாள் இராமனுஜா் திருவீதி உலா நடைபெற்றது.

திருக்கோஷ்டியூரில் ஆளவந்தாரின் ஐந்து சீடா்கள் ஒருவரான திருக்கோட்டியூா் நம்பியிடம் 18 முறை சென்று எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை வைணவ அடிகளான ராமானுஜா் உபதேசம் பெற்றாா்.

இந்த மந்திரம் பரம ரகசியம் என்றும், இதை எவருக்கும் வெளியிடக்கூடாது’ என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினாா். இருப்பினும், உபதேசம் பெற்றவுடன் திருக்கோஷ்டியூா் கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஏறிய ராமானுஜா் மக்கள் அனைவரும் சாதி சமய பேதமற்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தாா். அதனால், இந்தக் கோயிலில் இராமானுஜருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, இந்தத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.