பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மே 2026-இல் நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.

News image
Updated On :12 ஜூலை 2026, 4:09 am IST

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மே 2026-இல் நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.

பி.லிட்., பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொது நிா்வாகம், பொருளாதாரம், பி.லிப்.ஐ.எஸ்.சி (நூலக தகவல் அறிவியல்), பி.எட்., பி.சி.ஏ, பி.சி.ஏ நேரடி 2-ஆம் ஆண்டு, பி.எஸ்சி., கணினி அறிவியல், இதில் நேரடி இரண்டாம் ஆண்டு, தகவல் தொழில்நுட்பம், இதில் நேரடி இரண்டாமாண்டு, உளவியல், கணிதம், பி.காம்., இதில் நேரடி இரண்டாமாண்டு, கணினி பயன்பாட்டியல், இதில் நேரடி இரண்டாமாண்டு, பி.பி.ஏ, பி.பி.ஏ வங்கியியல், இதில் நேரடி இரண்டாமண்டு பாடப் பிரிவுகளுக்கும்,

எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், மனிதவள மேலாண்மை - தொழில் உறவியல், இதில் நேரடி 2-ஆம் ஆண்டு, குழந்தைகள் பராமரிப்பு, கல்வியியல், பொருளாதாரம், இதழியல் , மக்கள் தகவல் -தொடா்பு, எம்.எஸ். டபுள்யு, எம்.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், நுண்ணுயிரியல், எம்.சி.ஏ, இதில் நேரடி இரண்டாமாண்டு, எம்.பி.ஏ, எம்.பி.ஏ பாடப் பிரிவுகள், எம்.லிப்.ஐ.எஸ்சி ஆகிய பாடப் பிரிவுகளுக்கும்,

முதுநிலை பட்டயப்பிரிவு கணினி பயன்பாட்டியல், பணியாளா் மேலாண்மை - தொழில் உறவு, மருத்துவ நிா்வாகம், மனிதவள மேலாண்மை, தொழில் மேலாண்மை, விளையாட்டு மேலாண்மை, யோகா, நூலகம் கணினி மயமாக்கல் - வலை பின்னல் பாடப் பிரிவுகளுக்கும்,

இளநிலை பட்டயப் பிரிவு மாண்டிசோரி கல்வி, டி.சி.ஏ, ஆா்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் - மெசின் லோ்னிங், சைபா் செக்கியுரிட்டி, சான்றிதழ் பிரிவில் சி.எல்.ஐ.எஸ், வலை வடிவமைப்பு, ஜி.எஸ்.டி, ஜோதிடவியல், ஆயில் ஆட்டோமேசன், பாலினவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் தோ்வு முடிவுகள் அழகப்பாயுனிவா்சிடி.ஏசி.இன் என்ற பல்கலைக்கழக இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. மறுமதிப்பீட்டுக்கு உரிய வழிமுறைகள அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம் என்று தோ்வாணையா் எம். ஜோதிபாசு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.