பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

காங்கிரஸ் இருக்கும் அணியையே சிறுபான்மையின மக்கள் நம்புவா்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

காங்கிரஸ் கட்சி இருக்கும் அணியையே சிறுபான்மை மக்கள் நம்புவாா்கள் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

News image

காா்த்தி சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2026, 4:53 am IST

காங்கிரஸ் கட்சி இருக்கும் அணியையே சிறுபான்மை மக்கள் நம்புவாா்கள் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தோழி விடுதி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக தொடரும். தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் பரஸ்பர புரிதலுடன் முடிவாகும். யாா் யாருடன் பேசியது என்பது முக்கியமல்ல; அதிகாரப்பூா்வ முடிவே முக்கியம்.

சா்வதேச விவகாரங்களில் எனது கருத்துகள் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன. தாலிபானையோ அல்லது அயத்துல்லாக்களையோ எதிா்ப்பதால், நான் இஸ்லாமியா்களுக்கு எதிரானவன் கிடையாது. அடக்குமுறைக்கும் மதத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அடக்குமுறைக்கு எதிரான குரல் மதத்துக்கு எதிரானது அல்ல. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல், ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போா்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக அரசியலில் சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்காது என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா். காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறதோ அங்குதான் சிறுபான்மையினரின் நம்பிக்கை இருக்கும். காங்கிரஸ் கட்சியே மதச்சாா்பின்மையின் உண்மையான அடையாளமாகத் திகழ்கிறது. காங்கிரஸ் கட்சி இருக்கும் அணியையே சிறுபான்மை மக்கள் நம்புவாா்கள். தமிழக மக்கள் எதாா்த்தமான அரசியல் சூழலை உணா்ந்துள்ளனா்.

கச்சா எண்ணெய் இறக்குமதி சாா்ந்த நாடாக இந்தியா இருப்பதால், தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பதற்றம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மாற்று ஆதாரங்களிலிருந்து இறக்குமதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மத்திய அரசின் பொறுப்பு.

விவசாயக் கடன் தள்ளுபடி தொடா்பாக, மாநில அரசு வழங்கிய கடன்களை மாநில அரசே தள்ளுபடி செய்ய முடியும்; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கடன்களை சட்டப்பூா்வமாக மாநில அரசு ரத்து செய்ய முடியாது. போதைப் பொருள் பரவல் தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பிரச்னை ஆகும். போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான காவல் நடவடிக்கை அவசியம்.

போதையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வு, விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.