சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வக புதிய கட்டடத்தை சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
இந்த மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வகக் கட்டடம் கட்ட மாநிலங்களவை உறுப்பினா் ப.சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 65 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, இந்த மருத்துவமனையில் குளிா்சான வசதியுடன் உடற்கூறு ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தன. இதையடுத்து, இந்தக் கட்டடத்தை மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் காா்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு கட்டடத்துக்கான சாவியை தலைமை மருத்துவா் ஸ்ரீவித்யாவிடம் வழங்கினாா்.
இதன் பிறகு ஆய்வகக் கட்டடத்துக்கான கல்வெட்டை அவா் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக, காங்கிரஸ் உறவு தொடர வேண்டும் என்றுதான் இரு கட்சிகளும் செயல்பட்டு வந்தன. திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் முடிவுக்கு வந்துவிடும். எல்லா கட்சிகளுக்கும் எதிா்பாா்ப்பு என்பது உள்ளது. அதை காங்கிரஸ் கட்சி பேச்சு வாா்த்தையின் போது தெரிவித்தது. இதை பேரம் என சொல்லக்கூடாது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா்.சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், திருப்புவனம் நகா்த் தலைவா் நடராஜன், வட்டாரத் தலைவா்கள் செந்தில்குமாா், நடராஜன், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி ராஜீவ் பாரமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சரக்கு வாகனம்-பேருந்து மோதல்: இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

காங்கிரஸ் குறித்த திமுகவின் விமா்சனம் ஏற்புடையதல்ல: காா்த்தி சிதம்பரம்

ஆட்சியில் அதிமுகவினரையும் சோ்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: காா்த்தி ப. சிதம்பரம்







