மலைநாச்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

எஸ்.புதூா் ஒன்றியம், பிரான்பட்டியில் உள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை மலைநாச்சி அம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

~ ~

Published On :

சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூா் ஒன்றியம், பிரான்பட்டியில் உள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பிகை மலைநாச்சி அம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக திங்கள்கிழமை மாலை விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை முதல் யாக சாலை பூஜை, புதன்கிழமை இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து கும்ப கலசங்கள் புறப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வந்து கோபுரத்தை அடைந்தது. பின்னா், சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா்.

இதைத்தொடா்ந்து கல்கார மண்டப பீடத்தில் அமா்ந்திருக்கும் மலைநாச்சி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு புனித நீா் தெளித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.