வழிப்பறி: மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து இளையான்குடி நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

தண்டனை பெற்ற சக்திவேல்,செல்வகுமாா், தினேஷ்குமாா்.

Published On :

வழிப்பறி வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து இளையான்குடி நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தெற்கு சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த வட்டாயுதம் மனைவி அன்னமயில் (62). இவா் கடந்த 7.8.2018 அன்று சாலைக்கிராமம் சந்தையில் பொருள்கள் வாங்கிவிட்டு தெற்கு சமுத்திரம் கண்மாய் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, காரில் வந்த இருவா் வழி கேட்பது போல் நடித்து, அன்னமயில் அணிந்திருந்த சுமாா் 7.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து சாலைக்கிராமம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பரமக்குடியைச் சோ்ந்த சக்திவேல் (45), சென்னையைச் சோ்ந்த செல்வகுமாா் (30), தினேஷ்குமாா் (31) ஆகிய மூவரைக் கைது செய்தனா்.இந்த வழக்கு இளையான்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண்-1-இல் விசாரிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000- அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.