தேனி மாவட்டத்தில் புதிதாக 11 தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இதுகுறித்து அவர் பேசியதாவது: விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்ட தேனி மாவட்டத்தில் நீராதாரத்தை மேம்படுத்துவதற்காக மூல வைகை ஆறு, வாழையாறு, பிள்ளயார் ஊத்து, நாகலாறு ஓடை, கொட்டகுடி ஆறு, சின்னாறு, சுத்தகங்கை ஓடை, மஞ்சளாறு ஆகியவற்றின் குறுக்கே புதிதாக 11 தடுப்பணைகள் கட்டப்படும்.
பெரியகுளம் வட்டாரம் புது அணைக்கட்டு கால்வாய், மத்துவார் குளம் ஆகியவை தூர்வாரப்பட்டு வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்படும். தேனி, மீறு சமுத்திரம் கண்மாய் ஆழப்படுத்தப்பட்டு, அதன் கொள்ளளவு உயர்த்தப்படும். ஆண்டிபட்டி கணவாய் முதல் தி.சுப்புலாபுரம் வரை உள்ள சாலை, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போடி விலக்கு வரையுள்ள சாலை ஆகியவை வலுப்படுத்தப்படும். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை, கம்பம் அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட நவீன ஆய்வக உபகரணங்கள் வழங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.